பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வேதியியல் துறை சார்பில் "வேதியியல் வளர்ச்சியில் அண்மைக்கால போக்குகள்' என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு கூட்டம்
கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தின் நிதியுதவியுடன் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர். ப.பிரபாகர் தலைமை வகித்தார்.
இக் கருத்தரங்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை தலைவர் பேராசிரியர் முனைவர். இராமகிருட்டினன் கலந்து கொண்டு " நீர் தர அளவுகோல் வரைமுறை செய்தல் " என்ற தலைப்பிலும், முனைவர்கள். பத்மகுமார் மற்றும் பக்த்தாஸ் அறிஞர்களும் சிறப்புரையாற்றினார்.
கோவை அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் பல்கலைக்கழகத்தின் வேதியியல்துறை பேராசிரியர் முனைவர். சுபாஷினி கே.ஸ்ரீபதி "நிறப்பிரிகை" என்கின்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அனைவரையும் வரவேற்று துறைத் தலைவர் முனைவர்.துரைமாணிக்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந் நிகழ்ச்சியில் பொள்ளாச்சி என்.ஜி.எம்., திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி மற்றும் 10-க்கும் மேற்பட்ட கல்லூரியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களும் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்து ஐ.எஸ்.பி.என். என்கிற தொகுப்பு எண் பெற்று நூலாக கல்லூரி முதல்வர் முனைவர். பிரபாகர் தலைமையில், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி இருபால் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் முன்னிலையில் நூலை வெளியிட்டனர்.
நிகழ்வின் நிறைவாக மிகச் சிறப்பாக விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப்பாளர், உதவிப் பேராசிரியர் முனைவர். விஷ்ணுதாரி நன்றி உரை நிகழ்த்தினார்.