தேனி
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி ஆணையாளர் இரா.கமலா தலைமையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்திற்கு நகராட்சி ஆணையாளர் இரா.கமலா தலைமை வகித்தார்.வருவாய் ஆய்வாளர் அ.நாகராஜன் முன்னிலை வகித்தார்.ஊர்வலத்தில் கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளராக பதிவு செய்ய வேண்டும்.இந்தியா குடி மகனுக்கு அடையாளம் வாக்காளராக பதிவு செய்வது போன்ற பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஊர்வலம் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளான பார்க் ரோடு,வ.உ.சி.திடல்,ரேஞ்சர் ஆபீஸ் ரோடு,வேலப்பர் கோவில் தெரு,குமுளி ரோடு வழியாக நகராட்சி அலுவலகம் வந்தடைந்தது.
இந்நிகழ்வில் பொறியாளர் செல்வராணி,மேலாளர் முனிராஜ்,கணக்கர் செழியன்,காசாளர் வாசு உள்பட ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி இருபால் ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.வருவாய் ஆய்வாளர் அ.நாகராஜன் நன்றி கூறினார்.