அசாமில் ஊரடங்கு உத்தரவு - இன்று மாலை 4 மணி வரை தளர்வு
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது.

 



வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.





 

இதற்கிடையே, அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருவதன் எதிரொலியாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


 

இந்நிலையில், அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Popular posts
நில தரகர்களுக்கும் அமைப்பு சாரா தொழில் முறையில் நிவாரண உதவி வழங்க வேண்டும் - முதல்வருக்கு விருகை வி.என்.கண்ணன் கோரிக்கை
Image
கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
Image
இராணுவ வீரர்களுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
Image
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை அடையாளம் காட்டும்படி வீடியோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் - அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்
Image
தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
Image