ஆந்திர அரசு துறைகளில் ஊழியர்கள், அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க இலவச டெலிபோன் எண்ணை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஜெகன்மொகன் ரெட்டி அதிரடி உத்தரவுகளையும், திட்டங்களையும் பிறப்பித்து வருகிறார்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, மதுபான கடைகள், பார்கள் குறைப்பு, புதிய அரசு பணி நியமனம் போன்ற அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அவர் தேர்தல் பிரசாரத்தின் போது லஞ்சத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.
இந்தநிலையில் ஆந்திர அரசு துறைகளில் ஊழியர்கள், அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க இலவச டெலிபோன் எண்ணை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதற்காக குடிமக்கள் உதவி மையம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதில் லஞ்சம் தருமாரு வற்புறுத்தப்பட்டால் 14400 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் மீது பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
புகார்கள் மீது 15 முதல் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு உதவி எண் தொடர்பான மையம் ஆந்திர முதல்வரின் முகாம் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜெகன்மோகன் ரெட்டி முதலில் போன் செய்து அதன் செயல்பாடுகள் பற்றி கேட்டிருந்தார்.
இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:-
ஊழலுக்கு எதிராக இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் தொடர்பாக புகார்களை நானே கவனித்து உள்ளேன் உதவி எண் மையம் மூலம் லஞ்சம் ஊழலை அரசின் அனைத்து மட்டங்களிலும் ஒழிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திராவில் லஞ்ச புகார்களை தெரிவிக்க இலவச டெலிபோன் வசதி - ஜெகன்மோகன் ரெட்டி
அமராவதி :