70 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம் பலம் வாய்ந்து திகழ்கிறது - பிரதமர் மோடி

புதுடெல்லி:



கடந்த 70 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம் அதிகாரத்துடன் பலம் வாய்ந்து திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பின் 70-வது ஆண்டு தினத்தையொட்டி பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் இன்று நடந்தது.
பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
இன்று வரலாற்று சிறப்பு மிக்க தினம். 70 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் மகத்தான அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டோம்.
இந்திய அரசியல் அமைப்பு என்பது குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை எடுத்துக் காட்டுவது தான் நமது சிறப்பு அம்சமாகும். நமது அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதை சிந்திக்கலாம்.
கடந்த 70 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம் அதிகாரத்துடன் பலம் வாய்ந்து திகழ்கிறது. குடிமக்கள்கள் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். உதாரணத்துக்கு இந்த தினத்தில் போக்குவரத்து விதி முறைகளை பின்பற்றுவது நமது கடமையாக அமைய வேண்டும்.
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.



Popular posts
நில தரகர்களுக்கும் அமைப்பு சாரா தொழில் முறையில் நிவாரண உதவி வழங்க வேண்டும் - முதல்வருக்கு விருகை வி.என்.கண்ணன் கோரிக்கை
Image
கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
Image
இராணுவ வீரர்களுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
Image
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை அடையாளம் காட்டும்படி வீடியோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் - அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்
Image
தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
Image