சிவகங்கையில் இராணி வேலுநாச்சியாருக்கு கோவில் கட்ட அறக்கட்டளை முடிவு October 5, 2019
சிவகங்கையில் இராணி வேலுநாச்சியாருக்கு கோவில் கட்ட அறக்கட்டளை முடிவு

October 5, 2019


சிவகங்கை நகரின் மத்தியிலுள்ள தெப்பக்குளத்தின் தென்கரையில் இராணி வேலுநாச்சியாரின் நினைவிடம் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தில் இராணி வேலுநாச்சியார் அறக்கட்டளையின் கூட்டம் அதன் நிறுவனர் மன்னர் பரம்பரையான கோபால்துரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு செயலாளர் மணிமுத்து முன்னிலை வகித்தார். பொருளாளர் சுப்பிரமணிய ராஜா வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

 

 

1. சுதந்திரப் போராட்ட வீராங்கனை இராணி வேலுநாச்சியாருக்கு அவரின் நினைவிடத்தின் அருகே திருக்கோவில் கட்ட ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது. 

2. கட்டப்படும் கோவிலில் இருகால பூஜை நடத்த வேண்டும். வேலுநாச்சியார் சாதி மதங்களைக் கடந்த போராளி. அவருக்கு கோவில் கட்டுவதில் அனைவரின் பங்கேற்பை பெறுவதற்கு விரும்பியவர்கள் யாராயினும் ஒரு நபர் ஒரு ரூபாய் வீதம் நன்கொடையாக செலுத்தலாம் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணைச் செயலாளர் சக்கந்தி பாலா, துணைத்தலைவர் அதிபதிராஜா, கோவில் திருப்பணி அமைப்பாளர் நாகதீபா, படமாத்தூர் ஜமீன் வகையரா பாண்டித்துரை, முத்துவடுகநாதர் சமுக நல அறக்கட்டளையின் செயலாளர் பொன்னுச்சாமி, கூட்டுறவு வங்கி சேதுபதி, தமறாக்கி செல்வம், உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.


Popular posts
நில தரகர்களுக்கும் அமைப்பு சாரா தொழில் முறையில் நிவாரண உதவி வழங்க வேண்டும் - முதல்வருக்கு விருகை வி.என்.கண்ணன் கோரிக்கை
Image
கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
Image
இராணுவ வீரர்களுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
Image
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை அடையாளம் காட்டும்படி வீடியோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் - அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்
Image
தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
Image