பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு சிறப்பு முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதுவக்கி வைத்தார்.
October 2, 2019
பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையை ஒட்டி மாமல்லபுரம் அதிக உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு சிறப்பு முகாமை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ”பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்னும் சிறப்பு முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அங்கு அமைக்கப் பட்டிருந்த ”பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்னும் சிறப்பு முகாமையும், முதலமைச்சர் துவக்கி வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் பார்வையிட்டார்.
இம்முகாமில் மொத்தம் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு, தானிய வகைகள், சணலால் செய்யப்பட்ட பைகள், செம்பினால் ஆன தண்ணீர் குவளைகள், தேங்காய் ஓடுகளால் ஆன கலை பொருட்கள்,மரப்பேனா, பாக்குமட்டை, பனை ஓலை, கரும்பு சக்கையினால் செய்யப்பட்ட பொருட்கள், உள்ளிட்டவை காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
மேலும் மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் வருகிற 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது தலைவர்கள் இருவரும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், வெண்ணெய் பாறை, ஐந்துரதம் பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.
இதையடுத்து இந்த பகுதிகளை தூய்மைபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டதோடு, ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட தள்ளுவண்டி, மற்றும் பெட்டிக்கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. கடைகளை அகற்றிய பகுதிகளில் பூஞ்செடிகள் வைக்கப்பட்டு வருவதால் மாமல்லபுரம் நகரமே புதுபொலிவோடு காட்சி தருகிறது.
மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாமல்லபுரம் கடற்கரை கோயில் எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள வரலாற்று காட்சிக் கூடத்துடன் கூடிய நுழைவு சீட்டு கட்டிடத்தை தலைவர்கள் இருவரும் சேர்ந்து திறந்து வைக்க உள்ளனர்.
இதையடுத்து அதன் அருகே இருநாட்டு நட்புறவையும் உணர்த்தும் வகையில் இரண்டு யானைகளுடன் கூடிய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் சந்தித்து பேசும் இடமாகவும் கலை நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கும் இடமாகவும் கடற்கரை கோவில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து கடற்கரை கோவிலுக்கு செல்லும் வழியில் இருந்த பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 120 கடைகளை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 120 கடைகளிலும் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னேற்பாடாக மாமல்லபுரம், கல்பாக்கம், தேவநேரி, கொக்கிலமேடு, சூலேரிக்காடு, நெம்மேலி, பட்டிபுலம் பகுதி மீனவர்கள் வருகிற 6-ந்தேதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மீனவர்கள் அனைவரும் கடலுக்கு செல்லக்கூடாது எனவும், கடலோர பாதுகாப்பு படையினர் தடை விதித்துள்ளனர்.
இந்தநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வெளியுறவு செயலர் விஜய் கேஷவ் கோகலே, மத்திய உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலர் சண்முகம் ஆகியோர் நேற்று மாமல்லபுரம் வந்திருந்தனர். பணிகளை வேகப்படுத்தி மாமல்லபுரத்தை 10-ந் தேதிக்குள் பசுமை நகரமாகவும் மாற்றி குப்பைகள் இல்லாத தூய்மை நகரமாகவும், புதுப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
கடற்கரை கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் உத்தரவிட்டனர். மாமல்லபுரம் முழுவதும் பன்மடங்கு பாதுகாப்பு பலப்படுத்துமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளதை அடுத்து உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாமல்லபுரம் சென்றார்.அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர், பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.