SDPI_கட்சியின் மாநில பேச்சாளர் நினைவேந்தல் கூட்டம்:
October 5, 2019
SDPI கட்சியின் மாநில பேச்சாளர் மர்ஹும் KS என்ற செய்யது இப்ராஹீம் அவர்களின் மறைவையொட்டி நினைவேந்தல் கூட்டம் இன்று(04-10-2019) மதுரை ஹோட்டல் பிரெசிடென்டில் SDPI கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்.SDPI கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் KS அவர்களின் குடும்பத்தார்கள் முன்னிலை வகித்தனர்.SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்,பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இலியாஸ்,முகம்மது நசுருதீன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் மாலின்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட தலைவர் இக்பால்,JAQH மூத்த தலைவர் வழக்கறிஞர் இமாம் உசேன்,
தமுமுக மாநில அமைப்பு செயலாளர் முஹம்மது ஹவுஸ்,இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராஜா உசேன்,JAQH மாவட்டத் தலைவர் ஆஷிக் பிர்தௌஷி,இந்திய தேசிய லீக் மாநில அமைப்புச் செயலாளர் சீனி முஹம்மது,
வீமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்டத்தலைவர் கதீஜா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இந்த நினைவேந்தல் கூட்டத்தில் SDPI கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள்,தோழமை கட்சிகள் இயக்கங்களின் தலைவர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிறைவாக SDPI கட்சியின் மதுரை மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.